Monday, February 19, 2007

பம்பரக் கண்ணாலே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச்சிலைபோல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே (பம்பர)

கட்டாணி முத்தழகி, காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுபடியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச்கசிலைபோல் வந்து மனதைத் தவிக்கவிட்டாளே (பம்பர)

கண்டவுடன் காதலே கொண்டாளென் மீதிலே
பெண்டாட்டியாகிடும் நாள் எப்போது - என்
பெண்டாட்டியாகிடும் நாள் எப்போது
திண்டாடித் தவிக்கிறேன் தினம்தினமும் துடிக்கிறேன்
தங்கச்சிலைபோல் வந்து மனதைத் தவிக்கவிட்டளே (பம்பர)

லரரடியா லா, லரரடியா லா லரரடியா லா..ஆ

Sunday, February 18, 2007

குங்குமப் பூவே

குங்குமப் பூவே, கொஞ்சு புறாவே
தங்கமே உன்னைக் கண்டதுமின்பம்
பொங்குது தன்னாலே

போக்கிரி ராஜா, போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே

ஜம்பரு கட்டும் தாவணிப் பட்டும் சலசலக்கையிலே
என் மனம் கெட்டு ஏக்கமும் பட்டு என்னமோ பண்ணுதடி

சித்திரப்பட்டுச் சேலையைக் கண்டு உனக்குப் பிரியமா நீ
பித்துப் பிடித்துப் பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா

குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சு புறாவே

சந்தனப்பொட்டும் மல்லிகை மொட்டும் சம்மதப்பட்டுக்கணும்
தாளமுந்தட்டி மேளமுங்கொட்டி தாலியைக் கட்டிக்கணும்

தந்தனத்தானா சிந்துகள் பாடி தந்திரம் பண்ணாதே நீ
மந்திரத்தாலே மாம்பழத்தாலே பறிக்க எண்ணாதே

குங்கும குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சு புறாவே